குதிரை ஒன்று மூன்று பேர்களை கொடூரமாக கடித்து விட்டு திடீரென ரத்தம் கக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் என்ற பகுதியில் லோகேஸ்வரன் என்ற சிறுவனை தெருவில் சென்று கொண்டிருந்த குதிரை திடீரென விரட்டி கடித்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மேலும் இரண்டு பெண்களையும் குதிரை கடித்து உள்ளது. இதனால் படுகாயமமடைந்த மூன்று பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குதிரையை பொதுமக்கள் துரத்தி சென்ற போது திடீரென குதிரை ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்தது. குதிரையை கயிற்றால் பொதுமக்கள் கட்டி போட்ட நிலையில் சிறிது நேரத்தில் ரத்தம் கக்கி உயிரிழந்தது. இது தொடர்பாக குதிரையின் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.