குறைந்த அளவே தண்ணீர் கொடுத்த கர்நாடக அரசு!

Filed under: இந்தியா,தமிழகம் |

கர்நாடக அரசுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசுடன் தமிழ்நாட்டிற்கு விவசாய பயன்பாடுகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் தொடர்ந்து பிரச்னைகள் இருந்து கொண்டுதான் உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகளும் சமீபத்தில் போராட்டம் செய்தனர். எனினும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்குள் 6.48 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சில வாரங்கள் முன்னதாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் மொத்த அளவீட்டில் 15 நாட்களில் 3.9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவில் பாதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள தகவல் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னபடி 6.48 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.