மூன்று புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அச்சட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த சட்டங்கள் உடனே நடைமுறைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
150-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்தபோது மூன்று புதிய குற்றவியல் தடுப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஜனாதிபதி திரௌபதி முர்மு இச்சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 1898ம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய நியாய சன்ஹிதா என்றும் 1860ம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய சுரக்ஷா சன்ஹிதா என்றும் 1872ம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய சாக்ஷிய அதினியம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.