இங்கிலாந்தில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் பச்சிளங்குழதைகள் நர்ஸ் மூலமாக கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டின் வடமேற்குப் பகுதியில் கவுண்ட்ஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பிரபலமான இம்மருத்துவமனையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜுன் வரையிலான காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்திற்கும் அதிகமாக உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறப்பில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது நடந்து வந்தன. இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் புகாரளிக்கப்பட்டது, போலீசார் கடந்த 2019ம் ஆண்டு மருத்துவமனையில் விசாரணையைத் தொடங்கினர். அதில், லூசி லெட்பி என்ற செவிலியர் அங்கு பணியாற்றியதும், அவர் குழந்தைகள் உயிரிழப்பின்போது பணியில் இருந்தது தெரியவந்தது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், பிறந்த குழந்தைகளுக்கு அதிக பாலூட்டியும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில், ஊசி மூலம் காற்றைச் செலுத்தியும் கொன்றதாக தகவல் வெளியானது. நர்சு லூசி லெட்பி போலீசாரிடம் சிக்கியதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ரவி ஜெயராம் உதவி புரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இவ்வழக்கில் லூசி லெட்பி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் வரும் திங்கட்கிழமை, தண்டனை அறிவிக்கப்படும் என்று மான்செஸ்டர் கிரவுன் நீதிபதி அறிவித்துள்ளார்.