குழந்தைத் தொழிலாளர்கள்- குறித்து எடப்பாடி டுவிட்

Filed under: அரசியல்,தமிழகம் |

எடப்பாடி பழனிசாமி “சமூகநீதிக்கு எதிரான இந்த திமுக அரசிடமிருந்து இளைய சமுதாயத்தை காத்து, அவர்களின் எதிர்காலத்தை சீர்படுத்தி குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் உறுதியேற்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இன்று குழந்தைத் தொழிலாளார் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படை உரிமையான கல்வி விளையாட்டு மற்றும் பாதுகாப்பை அவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையை மறந்து, அரசுத்துறை நிறுவனமான ஆவினிலேயே குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் இருந்ததை கவனத்தில் கொள்ளாத, பள்ளிக் குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பெரும் வாய்ப்பை தவறவிட்ட, சமூகநீதிக்கு எதிரான இந்த திமுக அரசிடம் இருந்து இளைய சமுதாயத்தை காத்து, அவர்களின் எதிர்காலத்தை சீர்படுத்தி குழந்தை தொழிலாளர்களே இல்லாத உலகை உருவாக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் உறுதியேற்போம்’’ என்று பதிவிட்டுள்ளார்.