“குஷி” டிரெயிலரைப் பார்த்து நாக சைதன்யா வெளியேறினாரா

Filed under: சினிமா |

சமீபத்தில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இவர்களது விவாகரத்து செய்தியை ஊடகங்களும் ரசிகர்களும் பரபரப்பாக பேசினார்கள். விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் இருவரும் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் சமந்தா நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” மற்றும் “சகுந்தலம்” ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகின. இதையடுத்து “குஷி” திரைப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் அத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் ரிலீசானது. “ஹாஸ்டல் பாய்ஸ்” படத்தை திரையரங்குக்கு பார்க்க வந்த நாக சைதன்யா இடைவேளையில் “குஷி” படத்தின் டிரெயிலர் திரையிடப்பட்ட போது அங்கிருந்து வெளியேறியதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. சமீபகாலமாக நாக சைதன்யாவின் திரைப்படங்கள் வரிசையாக படுதோல்வி அடைந்து வருகின்றன.