‘குஷி’ திரைப்பட இசை நிகழ்ச்சி!

Filed under: சினிமா |

‘குஷி’ திரைப்படத்தின் இசை நிகழ்ச்சி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் “குஷி” திரைப்படத்தின் இந்நிகழ்ச்சி இசை ஆர்வலர்களையும், பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் ஜாவேத் அலி, சித் ஸ்ரீராம், மஞ்சுஷா, சின்மயி மற்றும் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் ‘குஷி’ திரைப்படத்தில் இடம்பெற்ற அழகான பாடல்களை பாடி அனைவரையும் கவர்ந்தனர். ‘குஷி’ திரைப்படத்தின் டைட்டில் பாடலுக்கு விஜய் தேவரகொண்டாவும்- சமந்தாவும் கைகோர்த்து ஒன்றாக நடித்து, நடனமாடி காண்பித்த போது பார்வையாளர்களின் கரவொலி எழுப்பி ரசித்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமந்தா பேசும்போது, “படப்பிடிப்பு தருணத்திலேயே இப்படத்தின் பாடல்களைக் கேட்டு ‘குஷி’ ஆல்பம் மீது காதல் கொண்டேன். பாடல்களை இங்கே நேரலையில் கேட்கும்போது செப்டம்பர் 1ம் தேதி உங்கள் அனைவரோடும் சேர்ந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. நீங்கள் அனைவரும் விரும்பும் ஒரு திரைப்படத்தை எப்போதும் உங்களுக்கு வழங்க விரும்புகிறோம். அப்படி ஒரு முயற்சியை இந்த படத்தின் மூலம் செய்துள்ளோம். ‘குஷி’ திரைப்படத்தில் மூத்த கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களின் பங்களிப்பு திரைப்படத்தை வலிமையாக்கி இருக்கிறது. நீங்கள் என் மீது காட்டும் அன்பினால் நான் ஆரோக்கியத்துடன் மீண்டு வருவேன். ‘குஷி’ பிளாக்பஸ்டர் ஹிட் என்பது உறுதி.‌

விஜய் தேவரகொண்டா பேசும்போது, “இங்கு குஷி இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மற்றும் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் இணையதளத்தில் பார்வையிடும் பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி. செப்டம்பர் ஒன்றாம் தேதி அன்று உங்களுக்கு ‘குஷி’யாக இருக்க வாழ்த்துக்கள்.