“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார்.
இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இத்திரைப்படத்துக்காக நீளமாக தாடி மற்றும் முடிவளர்த்து மற்ற படங்கள் எதிலும் நடிக்காமல் சில மாதங்களாக நடித்து வருகிறார் தனுஷ். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சிவராஜ்குமாரின் காட்சிகளை படமாக்கி முடித்ததாக அறிவித்தனர். படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் மற்ற அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். “கேப்டன் மில்லர்” படத்தின் முதல் லுக் போஸ்டர் விரைவில் ரிலீஸாகும் என தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.