January 12, 2024 | Filed under: சினிமா | Posted by: Shankar U
இன்று காலை 9 மணிக்கு தனுஷ் நடித்த “கேப்டன் மில்லர்” திரைப்படம் முதல் காட்சி தொடங்கியது. காலை 7 மணிக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கி விட்டது.
பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் 7 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. முதல் காட்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் இந்த படம் சுமாரான படம் என்று டுவிட்டர் பயனாளிகள் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். தனுஷின் நடிப்பு சூப்பராக இருப்பதாகவும் அவர் தனது முந்தைய படங்களை விட இரு மடங்கு நடிப்பில் அசத்தியுள்ளார் என்றும் கூறிய டுவிட்டர் பயனாளிகள், இன்டர்வெல் பிளாக் மற்றும் பின்னணி இசை சூப்பராக இருப்பதாக பதிவு செய்துள்ளனர். ஆனால் வன்முறை காட்சிகள் அதிகம் என்றும் துப்பாக்கி சண்டை மற்றும் கொலை செய்யும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும் படத்தின் மெயின்கதைக்கும் இந்த கொலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அருண் மாதேஸ்வரன் தனது முந்தைய படங்கள் போலவே தேவையில்லாமல் வன்முறையை கதையில் திணித்திருப்பதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தனுஷ் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பு அசத்தலாக இருப்பதாகவும் சிவராஜ்குமார் மீண்டும் ஒருமுறை தனது நடிப்பை நிரூபித்து உள்ளதாகவும் கூறப்படுவதால் இந்த படம் ஓரளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘கேப்டன் மில்லர்’ நெகட்டிவ் விமர்சனங்கள்!

Related posts:
Related posts: