“கேப்டன் மில்லர்’’ ஜூலை 28ம் தேதி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்து இயக்கி வரும் படம் “கேப்டன் மில்லர்.” இப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தென்காசி அருகே நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீசானது. வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளுக்கு அடுத்த அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் “ஜூலை 28 சம்பவம் இருக்கு கில்லர் கில்லர்” என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று படத் தயாரிப்பு நிறுவனம் வரும் ஜூலை 28ம் தேதி “கேப்டன் மில்லர்” திரைப்பட டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.