இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் மே 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும், கேரளாவில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால், இந்திய வானிலை ஆய்வு மையம் மே 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆறு மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா அரசு கேரளாவில் இதுவரை பெய்த மழை காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 59 பேர் வீடுகளை முழுமையாகவும் 539 பேர் வீடுகளை பகுதியாகவும் இழந்துள்ளனர் என்றும் தொடர் மழை பெய்வதால் கட்டுப்பாட்டு அறைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது