கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் உத்தரவு

Filed under: இந்தியா |

வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டால் அதற்-கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கேரள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் மோசடி செய்து பணம் எடுத்து வருவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவில் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் அதற்கு அந்த வங்கி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பு சம்பந்தப்பட்ட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.