கேரள மாநிலத்திற்கு மஞ்சள் அலர்ட்!

Filed under: இந்தியா |

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று கேரள மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த சில நாட்களுக்கு அதாவது அக்டோபர் 21ம் தேதி வரை கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. ஐஎம்டி எச்சரிக்கையின் படி, அக்டோபர் 20ம் தேதி வரை கேரள மாநிலத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஐஎம்டி கணித்துள்ளது. மேலும் வியாழக்கிழமை எர்ணாகுளம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு. இதனைத்தவிர 19ம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கும், 20ம் தேதி எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கும், 21ம் தேதி பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.