கேரள வங்கி வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வங்கியில் கடன் வாங்கி இருந்தால் அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது.
திடீரென கடந்த மாதம் 30ம் தேதி வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய ராணுவம் உள்பட மீட்பு படையினர் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழப்பு போக ஏராளமான பொருட்கள் சேதமடைந்திருப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வயநாடு நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்கிறோம். வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணம் அடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோர் கடன்களை திருப்பி செலுத்த தேவையில்லை” என்று கேரள வங்கி அறிவித்துள்ளது. அந்த வங்கிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.