பாஜக நிர்வாகி உமா கார்கி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பாஜக நிர்வாகி உமா கார்கி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி கேட்டனர். நீதிமன்றம் ஒரு நாள் காவலில் விசாரிக்க சைபர் கிரைம் போலீசுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரியார் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக ஆதரவாளர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.