புது டெல்லி,மே 09
புகழ்பெற்ற கைலாஷ் – மனாசரோவர் யாத்திரை வழித்தடத்தில், தர்ச்சுலாவிலிருந்து லிபுலேக்( சீன எல்லை) வரை சாலைத்தொடர்புப் பணியை நிறைவு செய்த எல்லை சாலைகள் அமைப்பின் முயற்சியை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார்.

இந்தச் சாலையை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காணொளிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்து, பித்தோரகாரிலிருந்து முதல் வாகனத் தொகுதி செல்வதற்குக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எல்லைப்புறக் கிராமங்கள் முதன்முதலாக சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளதாக கட்கரி கூறினார். இதனால், கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் மிகச் சிரமமான 90 கி.மீ பயணத்தைத் தவிர்த்து சீன எல்லை வரை தற்போது வாகனங்கள் மூலம் செல்ல முடியும் என்று அவர் கூறினார்.
Related posts:
பிரதமர் மோடி அறிவித்தபடி டால்பின் பாதுகாப்புத் திட்டம் 15 நாட்களில் தொடங்கப்படும் - பிரகாஷ் ஜவ்டேகர்...
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க மோடிக்கு ஜெ. வலியுறுத்தல் !
நீட், ஜே.இ.இ தேர்வுகளை நடத்துவதற்கு ஆதரவாக 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்!
இந்திய யோகா சங்கத்தின் தலைவராக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தேர்வு!

