கொரோனாவினால் முதல் பலி, ஊரடங்கு அமல்!

Filed under: உலகம் |

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வடகொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்பட்டது.

ஆனால், வட கொரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்முதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது அந்த நபர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் கிம், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தினார். முதல் முறையாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகியுள்ளதால் வடகொரியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.