அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோடை காலம் தொடங்க உள்ளதையடுத்து தமிழக கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் கொடுக்கும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு “நாளை முதல் தமிழ்நாட்டிலுள்ள 48 முதல் நிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படும். இந்த நீர்மோர் வழங்கும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கவுள்ளார். கோவிலில் உள்ள கருங்கல் பதிக்கப்பட்ட தரை உள்ள இடங்களில் தரை விரிப்பு போடும் திட்டத்தையும் அறநிலைத்துறை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள்” தமிழக அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.