கோலா நடனம் ஆடிக் கொண்டிருந்த நடன கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டதால் மேடையிலேயே மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னட சினிமாவில் சமீபத்தில் வெளியான “காந்தாரா” திரைப்படத்தில், கோலா நடனம் இடம்பெற்றது.இது, கன்னட பிரதேசத்தில் மக்களிடையே பிரபலம். கர்நாடக மாநிலத்தில், கடற்கரையோர கிராமங்களில் உள்ள கலைஞர்கள் பூத அராதனா செய்வார்கள். தக்ஷினா கன்னட மாவட்டத்தில், தெய்வீக கலை நிகழ்ச்சியில் பங்கேற்று ‘பூத கோலா ‘நடனம் ஆடிக் கொண்டிருந்த கந்து அஜிலா என்ற நடன கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே மரணமடைந்தார். அவர் கீழே விழுந்தபோது முதலில் நடிப்பதாக எண்ணிய மக்கள் அவர் உண்மையிலேயே மயங்கி விழுந்திருப்பதைப் பார்த்து, மருத்துவர்களுக்கு தகவலளித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.