மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர் என்று கோவையில் பிரச்சாரம் செய்தார்.
கமல்ஹாசன் கோவையில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது, “வரும் பாராளுமன்ற தேர்தல் என்பது சாதாரண மற்ற தேர்தலை போல் கிடையாது. இது ஒரு இரண்டாவது சுதந்திரப் போர். சிறையில் கஷ்டப்பட்டு செக்கிழுத்து, வாழ்விழந்து மீட்ட சுதந்திரம் வெள்ளையர்களை வெளியேற்றினாலும் அந்த தியாகம் எல்லாம் இன்று கொள்ளையர்கள் கையில் நாடு இருக்கிறது. நடக்க இருப்பது இரண்டாவது சுதந்திரப் போர், எனவே ஏப்ரல் 19ம் தேதி நீங்கள் சரியான முடிவு எடுத்தால், ஜூன் 4-ம் தேதி இரண்டாவது சுதந்திர நாள்” என்று கமல்ஹாசன் பேசினார். திமுக கூட்டணியில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருந்தாலும் அந்த கட்சிக்கு ஒரு தொகுதி கூட கொடுக்கப்படவில்லை என்றும் இருப்பினும் கமல்ஹாசன் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.