பல்வேறு பொருட்களுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் கோவையில் தொடங்கிய பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள் என அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி. இந்த ஆண்டின் முதல் சிறப்பு விற்பனை கண்காட்சியை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டபத்தில் கோ கிளாம் தமது விற்பனை கண்காட்சியை துவங்கியது. ஜனவரி 5,6,7ம் தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொங்கல் விடுமுறை மற்றும் முகூர்த்த கால விழாக்களை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கண்காட்சியில் கொல்கத்தா, லூதியானா, குஜராத், டில்லி, ஜெய்ப்பூர், புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக ஆடை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கான கைவினை பொருட்கள், பிரபல கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஹேண்ட் பேக்குகள், பிரத்யேக டிசைனில் உருவாக்கப்பட்ட காலணிகள் பெண்களுக்கான, ஜிமிக்கி கம்மல், வளையல், வெள்ளி அணிகலன்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் இயற்கை முறையிலான அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றிற்கு தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.