பிப்ரவரி 17ம் தேதி சமந்தா நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டு இருந்தது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்திலுள்ள “ஷகுந்தலம்“ எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்கவுள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் பின்னர் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தை 3 டி தொழில்நுட்பத்தில் மாற்றுவது சம்மந்தமான தாமதம் காரணமாக இப்போது மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்தவொரு காரணமும் சொல்லாமல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.