சகோதரரை வெட்டிக் கொன்ற தங்கை!

Filed under: இந்தியா |

8 ஆண்டுகளுக்கு முன் காதலனுடன் சேர்ந்து தனது சொந்த சகோதரரை 20 துண்டுகளாக வெட்டிக் கொன்றது தெரிய வந்துள்ளது.

பெங்களூருவில் கடந்த 2015ம் ஆண்டு பாகியஸ்ரீயின் செயலை அவரது சகோதரன் லிங்கராஜ்(22) கண்டித்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, பாக்கியஸ்ரீ தன் கள்ளக்காதலன் சங்கரப்பாவுடன் சேர்ந்து, அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார். அதன்படி, ஒரு நாள் பாக்யஸ்ரீ, சங்கரப்பாவுடன் சேர்ந்து, லிங்கராஜை அடித்துக் கொன்றனர். இது தெரியக்கூடாது என்பதற்காக, அவரது உடலை சுமார் 20 துண்டுகளாக வெட்டி, அதை 3 பிளாஸ்டிக் பையில் போட்டு, அதனை ஜிகினி அருகிலுள்ள மஞ்சனஹள்ளி ஏரியில் இருவரும் வீசியுள்ளனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை செய்து வந்தனர். தற்போது 8 ஆண்டுகளுக்குப் பின் இக்கொலையைச் செய்தது லிங்கராஜின் உடன் பிறந்த சகோதரி என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாக்கியஸ்ரீ மற்றும் அவரது காதலரை போலீசார் கைது செய்துள்ளனர்.