அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்னை பூதாகராமாகிக் கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பு, கொஞ்சம்கூட யோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டார்கள். தேவையில்லாமல் ஒற்றை தலைமை பிரச்சனையை கிளப்பி, அனைத்துவிதமான பிளான்களையும் இவர்களே தவிடுபொடியாக்கிவிட்டனர் என்ற சலசலப்புகள் அதிமுகவுக்குள் இன்னும் அதிகமாகவே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. அதிமுகவில் இன்னும் ஒரு முடிவு எட்டப்படவில்லை.. அதேசமயம், இவர்கள் இருவரும் இணைவார்களா என்ற சந்தேகமும் தொண்டர்களுக்குள் எழுந்துள்ளது.
அதிமுகவில் ஏற்கனவே இருந்த பழைய நிலையே தொடர வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும், இதில் சிக்கல் ஏற்பட்டால் பொதுக்குழுவை நடத்த ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்துள்ளார். நீதிபதியின் உத்தரவு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.