சசிகலா வீட்டிற்கு போன ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று சசிகலா வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

சமீபத்தில் சசிகலா புதிய வீடு கட்டிய நிலையில் அந்த வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பல பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகலாவின் வீட்டுக்கு சென்று வீடு கோவில் போல் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். தற்போது ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி இன்று சசிகலாவின் ஜெயலலிதா இல்லத்தில் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி உள்ளார். மேலும் ஜெயலலிதா குறித்து இருவரும் பல்வேறு விஷயங்களை இந்த சந்திப்பின்போது பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சிவசங்கரியை அடுத்து இன்னும் சில பிரபலங்கள் சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.