சத்யசிவா “கழுகு” மற்றும் “கழுகு 2” உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்போது அவர் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் லிஜோ மோல் உள்ளிட்டவர்கள் நடிக்கும் “ஃப்ரீடம்“ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
“ஃப்ரீடம்” படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சிநேகன், மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சசிகுமாரின் “அயோத்தி” திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் படங்களின் மேல் கவனம் அதிகமாகியுள்ளது.