சசிகலா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61வது குருபூஜை மற்றும் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக வந்தபோது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
பாஜக கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு: தேர்தல் சமயத்தில் தான் எந்த கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறார்கள் என்று தெரியும். ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமா என்றால், எனக்கு அப்படி தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் காவலர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள். அந்த சமயத்தில் ஒருவர் வாயில் அருகில் வரும் அளவிற்கு காவலர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவரை முன்கூட்டியே பிடித்திருந்தாலும் மறைக்காமல் தெரிவித்து இருக்கலாம். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் உள்ளது. எங்க கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல தான் அவர் (ஓபிஎஸ்) விருந்தாளி இல்லை இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மக்களுக்கு தெரியும் யார் ஆட்சியில் என்ன செய்தார்கள் மக்களுக்கு அது சென்று சேர்ந்ததா என்று மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை மக்களிடம் கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் சொன்னதை எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு. தொண்டர்களை தொடர்ந்து சந்தித்து தான் வருகிறேன் தேர்தலும் வருகிறது விரைவில் சுற்றுப்பயணம் ஆரம்பிப்பேன்” என்றார்.