‘சட்னி சாம்பார்’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்!

Filed under: சினிமா |

யோகி பாபு இல்லாத படங்கள் இல்லாத அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் அவர் தன் நடிப்பின் திறமையால் ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து கொண்டிருக்கிறார். அவ்வகையில் அவர் நடித்த “தர்மபிரபு” மற்றும் “மண்டேலா” ஆகிய படங்கள் வெற்றியடைந்ததையடுத்து இப்போது மேலும் சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அவ்வகையில் இப்போது அவர் “மொழி,” “பயணம்” உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக உருவாக்கப்படுகிறது. ஜூலை 15ம் தேதி பூஜையோடு தொடங்கிய இத்திரைப்படத்துக்கு “சட்னி சாம்பார்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் வாணி போஜன், நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.