சத்குரு கடந்த 4 வாரங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இருந்தபோதிலும், சத்குரு மஹாசிவராத்திரியிலும் டில்லியில் நடைபெற்ற மற்ற கூட்டங்களிலும் முழுமையாக பங்கேற்றார்.
சத்குரு சில நாட்களுக்கு முன் அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை. சத்குருவின் உடல் நிலையில் முன்னேற்றம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது இது பற்றி மருத்துவர்கள் “சத்குரு எங்களால் ஏற்படுத்தப்பட்ட மருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி தன்னைத்தானே அவர் குணப்படுத்திக் கொள்கிறார்” என்று கூறினார்.