“சந்திரமுகி -2” பட முதல் சிங்கில்!

Filed under: சினிமா |

“சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

“சந்திரமுகி” முதல் பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். 2ம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ளது. படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது. இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள “வேட்டையன்” கதாபாத்திரத்தின் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டது. இத்திரைப்படத்தில் “சந்திரமுகி”யாக நடிக்கும் கங்கனாவின் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இதன் முதல் சிங்கில் ‘ஸ்வாகதாஞ்சலி’ பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறி இதன் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது. “சந்திரமுகி 2” திரைப்படத்தின் முதல் சிங்கில் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.