சபாநாயகரிடமிருந்து பொன்முடி தொகுதி பற்றி தகவல் இல்லை!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேர்தல் ஆணையர் பொன்முடி தொகுதி குறித்து சபாநாயகரிடம் இருந்த எந்த தகவலும் வரவில்லை: என்று கூறியுள்ளார்.

நீதிமன்றத்தால் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருடைய அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது என செய்திகள் வெளியானது. ஆனால் இன்னும் சபாநாயகரிடமிருந்து முறையாக பொன்முடி போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்படவில்லை. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து சபாநாயகரிடம் இருந்து இதுவரை தகவல் இல்லை. ஆனால் அதே நேரத்தில் விளவங்கோடு தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். பாராளுமன்ற தேர்தலுக்கு பாதுகாப்புக்காக சென்னையில் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபட உள்ளனர்” என்று கூறினார்.