சமந்தாவின் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடிகை சமந்தா நடித்த “யசோதா” திரைப்படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கிராபிக்ஸ் பணிகள் தாமதமானதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுமென்றும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

சற்றுமுன் “யசோதா” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா கதாநாயகியாக நடித்த “யசோதா” படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 12ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து படத்தின் புரமோஷன் பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளது. எழுத்தாளர் கேரக்டரில் சமந்தா நடித்துள்ள இப்படம் திகில் கதையம்சம் கொண்டது. இத்திரைப்படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.