சர்ச்சையில் சிக்கிய தமிழன் பிரசன்னா காவல்நிலையத்தில் பாஜக சார்பில் புகார் !
திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவை சேர்ந்த பிரசன்னா நேற்று இரவு தனது சமூகவலைத்தள பக்கமான ட்விட்டரில் வெளியிட்ட கருத்து பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ளது, நேற்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார், அதில் பல்வேறு நடவடிக்கைகள் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து பேசியிருந்தார்.
இதனை கிண்டல் செய்யும் விதமாக பிரசன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஷகிலா திரைப்படத்தை மேற்கோள் காட்டி மோடியின் புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்திருந்தார், அதன் பிறகு எதிர்ப்பு எழவே தனது பதிவை நீக்கிவிட்டார், இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் தவறான முறையில் விமர்சனம் செய்த பிரசன்னா மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.
மேலும் உடனடியாக இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் விதத்தில் சர்ச்சையை உண்டாக்கும் பிரசன்னா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார். பிரசன்னாவின் கருத்திற்கு அவரது கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
©நெற்றிக்கண்