சர்ச்சையில் சிக்கிய நடிகை!

Filed under: சினிமா |

தனுஷுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மலையாளத்தில் “பிரேமம்“ படம் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் ஒரு புதிய பட புரோமோஷன் நிகழ்ச்சியினால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழில், தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி,” “தள்ளிப்போகாதே” உட்பட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கில் “கார்த்த்கேயா பேஜஸ்,” “பட்டர்பிளை” உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இதில், நிகில் சித்தார்த்தின் ஜோடியாக அனுபமா நடித்துள்ள படம் “கார்த்திகேயா 2.” இப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் புரமோஷனினல், சித்தார்த் கலந்துகொண்டுள்ளார். ஆனால் அவருக்கு ஜோடியாக நடித்த அனுபமா கலந்துகொள்ளவில்லை. இதனால் படக்குழு அவர் மீது அதிருப்தியடைந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அனுபமா, “கார்த்திகேயா 2” பட வெளியீட்டு தேதிகள் பல முறை மாற்றப்பட்டதால், என் கால்ஷூட்டை மற்ற படங்களுக்கு கொடுத்து விட்டேன். அதனால், இரு படங்களில் இரவு பகலாக நடித்து வருவதால், என்னால் புரமோஷனில் கலந்துகொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.