“சர்தார்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “ஏறுமயிலேறி” பாடல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சர்தார்’. கார்த்தி இப்படத்தில் வித்தியாசமாக இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கேரக்டர்களில் லைலா மற்றும் ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் “ஏறு மயிலேறு” என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இப்பாடலை கார்த்தியே பாடியுள்ளார். பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இப்பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது. திரைப்படம் வரும் தீபாவளியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.