‘சாகுந்தலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

சற்றுமுன் நடிகை சமந்தா நடித்த “சாகுந்தலம்“ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தா தற்போது “சாகுந்தலம்,” “குஷி” மற்றும் “யசோதா” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

“குஷி” திரைப்படம் ஏற்கனவே டிசம்பர் 23ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது “சாகுந்தலம்“ திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு சமந்தாவின் படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா, மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடித்த இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படமாக வெளியாகிறது. இத்திரைப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.