நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சற்றுமுன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சாட்டை துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து தமிழக அரசையும் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். இதன் அடிப்படையில் எழுந்த புகாரின் பேரில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் மற்றும் யூடியூப் பிரபலம் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளது அக்கட்சியின் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கட்டணம் தெரிவித்து வருகின்றன.