டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவின் ஆகிய இருவரும் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது. இதில் உங்களுக்கான கடினமானதை தேர்வு செய்யுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இப்பதிவு சோயிப் மாலிக்குடன் இவரது திருமணம் முடிவுக்கு வந்ததை உறுதி செய்தது. சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் சனா ஜாவத் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்து. சானியா மிர்சா புதுமண தம்பதிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.