சென்னை தரப்பில் பிராவோ 3, மோரிஸ், ஹோல்டர் தலா 2, மோகித் சர்மா 1 விக்கெட் கைப்பற்றினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை பேட் செய்தது. ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஹசி 9, முரளி விஜய் 14 ரன்களில் ரன்&அவுட் ஆனார்கள். சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரெய்னா 23 பந்தில் 4 பவுண்டரியுடன் 29 ரன் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
பத்ரிநாத் 8, டோனி 3, பிராவோ 3, ஜடேஜா 2 ரன்களில் வரிசையாக நடையை கட்டினர். கடைசி கட்டத்தில் அஸ்வின், மோரிஸ் ஜோடி அதிரடி காட்டியது. எனினும் அது வெற்றிக்கு கைகொடுக்கவில்லை. அஸ்வின் 28 பந்தில் தலா 3 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 46 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முடிவில் சென்னை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் ராஜஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. பிரவீன் தாம்பே 3, பால்க்னர், வாட்சன், சுக்லா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது பிரவீன் தாம்பேவிற்கு வழங்கப்பட்டது.