பிரபல நிறுவனம் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது.
வரும் செப்டம்பர் 15ம் தேதி சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர உள்ளது. “மாநாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படமும் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வழக்கம்போல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
கமல், ரஜினி, அஜீத், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களின் தமிழகத்தில் ரிலீஸ் செய்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தையும் ரிலீஸ் செய்கிறது.