சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டு சிறை!

Filed under: இந்தியா |

காசர்கோடு நீதிமன்றம் 9 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவில் உறவுக்கார சிறுமியை 9 ஆண்டுகளாக ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. குற்றவாளிக்கு தொகுத்து 97 வருட சிறை தண்டனையும் 8 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்ட நீதிமன்றம் அளித்த இந்த அதிரடி தீர்ப்பு கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.