சிறுமிக்கு வன்கொடுமை செய்த குடும்ப உறுப்பினர்களின் வெறிசெயல்!

Filed under: இந்தியா |

தந்தை மற்றும் உறவினர்களே 13 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, குட் டச், பேட் டச் பற்றி பாடம் நடத்தியபோது, அப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி பயிற்சி நடத்துபவரிடம் தெரிவித்தார். அதில் அச்சிறுமி தனது தந்தை, தூரத்து உறவினர் முறையிலான சகோதரன் மற்றும் மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் சிறுமி அவரது தூரத்து உறவினர் முறையிலான சகோதரனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால், சிறுமியைக் கொலை செய்துவிடுவேன் என்று அவர் மிரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 2024ம் ஆண்டு சிறுமி அவரது மாமாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த சிறுமி அவரது தந்தையால் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.