சிறுமி ஒருவரிடம் மும்பையில் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாவில் பாலோயர்ஸை அதிகரிப்பதாகக் கூறி ரூ.55 ஆயிரம் பணம் மோசடி செய்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரையிலும் பலரிடம் பணமோசடி அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் பிரபல நடிகை ஸ்வேதா மேனனிடம் மர்ம நபர்கள் வங்கி விவங்களைப் பெற்றுக்கொண்டு, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மும்பையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இன்ஸ்டாவில், பாலோயர்ஸ்களை அதிகரிப்பதாகக் கூறி 16 வயது சிறுமியிடம் ரூ.55,000 பணத்தை மோசடி செய்துள்ளனர். அவரது வங்கிக் கணக்கில் இருந்து மொத்தப் பணத்தை எடுத்ததால், சிறுமி அவரது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் போலீசில் சென்று புகாரளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசா£ர் யுபியை ஐடியை வைத்து விசாரித்து வருகின்றனர்.