சமூக வலைதளங்களை பயன்படுத்த அமெரிக்காவில் உள்ள சிறுவர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளது. இதனால், உலகில் உள்ள அனைவரும் இணையதளத்தையும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினாலும், இதனால் இளைர்கள் மற்றும் மாணவர்களின் மனம், உடல், மற்றும், படிப்பு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக், போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பதிவுகள் வெளியிடுவோரின் மன நலம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில், 13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்களில் கணக்குகள் உருவாக்கி, பதிவுகள் போடத் தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் தாக்கல் செய்துள்ளனர். மேலும், சிறுவர்கள் இப்பதிவுகளை பார்க்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.