சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தமிழ்நாட்டு சிறையிலுள்ள கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திப்பதில் நவீன முறை பயன்படுத்தப்படும் என என்பவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மத்திய சிறையில் கைதிகளை குடும்பத்தினர் சந்திக்கும் போது பொருட்களை கொடுப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய சிறைகளில் கைதிகள் குடும்பத்தினரை சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடித் தடுப்பு அமைக்கப்படும். கைதிகள் மற்றும் உறவினர்கள் போன்கள் மூலம் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் கைதிகளுக்கு அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் பொருட்களை கொடுப்பது தடுக்கப்படும். முதல் கட்டமாக மதுரை, கோவை, திருச்சி ஆகிய சிறைகளில் இந்த வசதி அமல்படுத்தப்படும். அதன் பிறகு அனைத்து சிறைகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும் என்று சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.