ஏ.ஆர்.முருகதாஸ், “தர்பார்” தோல்விக்குப் பிறகு 3 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்தார். அவர் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி சில நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை இடைவெளியே இன்றி நடத்தி வருகிறார் முருகதாஸ். இப்படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் வித்யுத் ஜமால்தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே துப்பாக்கி, பில்லா 2 மற்றும் அஞ்சான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.



