பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று “பிரின்ஸ்” திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றி உள்ளது.
இன்று நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று திடீரென இத்திரைப்படத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் இருபத்தி மூன்று நிமிடங்கள் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் நீளம் திடீரென 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த மாற்றமே படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் குறைத்தது. இந்நிலையில் இன்று வெளியாகி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.