இயக்குனர் சிவாவின் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் “வணங்கான்’’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு பாலா, சூர்யாவுடன் இணைந்துள்ள இப்படத்தில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இணை இயக்குனராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. 2வது கட்ட ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் சூர்யா பாலாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஆர்வமுடன் இருப்பதாக கூறினார். சமீபத்தில் வெளிநாடு சுற்றுலா சென்றுவந்த சூர்யா, இந்தியா திரும்பியதும் ‘வணங்கான்’ படத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது, அவர் சிவாவின் இயக்கத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.