மத்திய அரசு செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. நேற்று நள்ளிரவு முதல் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே ஏப்ரல் மாதம் நாடு முழுவதிலும் உள்ள பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இன்று முதல் தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, எலியார்பத்தி சாவடிகளில் கட்டணம் 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.