சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு, சனி ஞாயிறு மற்றும் சுதந்திர தின விடுமுறையை அடுத்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
போக்குவரத்து துறை ஏற்கனவே 2,100 பேருந்துகள் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சென்ற நிலையில் கூடுதலாக 543 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் மொத்தம் உள்ள 2643 பேருந்துகளில் 1,32,150 பேர் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நேற்று சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்டன என்பதும் இந்த பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து பயணிகளுக்கு வசதிக்காக நேற்று சென்னை மெட்ரோ ரயில் ஆறு நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்களை இயக்கியது.